தெலுங்கு நடிகர் சங்கத் (MAA) தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று (அக். 10) நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து, விஷ்ணு மஞ்சு அணி மோதியது. இதில் அதிக வாக்குகள் பெற்று விஷ்ணு மஞ்சு அணி வெற்றிபெற்றது.
இதனிடையே பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிவ பாலாஜியின் கையை விஷ்ணு மஞ்சு அணியைச் சேர்ந்த ஹேமா கடித்துள்ளார். இது தொடர்பான காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இது குறித்து சிவ பாலாஜியிடம் கேட்டபோது, "என் பின்னால் அவர் எதற்காக நின்றுகொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. எதனால் என்னைக் கடித்தார் என்பதுகூட எனக்குத் தெரியாது. அவரிடம்தான் எதற்காகக் கடித்தார் என்று கேட்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கூட்டணி சேரும் லோகேஷ் கனகராஜ் - விஜய்