எம்.எஸ். தோனி பயோபிக், சிச்சோரே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருவதை முன்னிட்டு பலரும், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி, “நடிகை சாரா அலி கான் தான் எனக்கு கஞ்சா, வோட்கா கொடுத்து பழக்கினார். போதைப் பொருள் பழக்கம் கொண்டவர் சாரா அலி கான்” எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகர் நிதிஷ் பரத்வாஜ் , “சாரா அலி கானும், நடிகர் சுஷாந்த் சிங்கும் போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்கள் அல்ல. இருவரது கண்களும் எப்போதுமே ஃபிரெஷ்ஷாகவே இருக்கும். சுஷாந்த் ரொம்பவே சுறுசுறுப்பாக சிந்திக்கக் கூடியவர். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களால் அப்படி சுறுசுறுப்பாக சிந்திக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சொக்க வைக்கும் சொர்ணக்கிளி சோனம் கபூருக்கு பிறந்தநாள்