கரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி கரோனாவுக்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கும் வகையில், இன்று இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக 9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்றார்.
விளக்கேற்றும் போது, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார். மோடியின் இந்த அறிவிப்பிற்குக் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
இந்நிலையில் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து நடிகையும், கல்வியாளருமான ஒய்.ஜி. மதுவந்தி தனதுக் கருத்தை பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ”இன்று இரவு, அகல் விளக்கு ஏற்றுவதன் மூலம் ஆத்ம பலம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும்.
1.5 மில்லியன் மக்கள் விளக்கை ஏற்றினால் எப்படி இருக்கும் என்று உணருங்கள். இதுகுறித்து ஜோதிடர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஒன்பது மணி 9 நிமிடங்களுக்கு ஏற்றும்நேரத்தில், ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதனால் சூரிய கிரகத்திற்கும், சந்திரக் கிரகத்திற்கும் பவர் அதிகரிக்கும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு எல்லாம் காரணம் ராகு என்பதால், அவருக்குச் சக்தி குறைய வாய்ப்புள்ளது என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது எவ்வளவு பாசிட்டிவான விஷயம் என்று யோசித்துப் பாருங்கள்.
நமது பிரதமர் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார். அதில் இதுவும் ஒன்று. ராகு என்றால் என்ன பாம்பு. இப்போது கால சர்ப்பதோஷம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கின்றன கரோனா வைரஸ் தொற்று பிரச்சனை உட்பட.
இந்தக் கிருமியை ஒழிக்க ஜோதிட பிரகாரம் இது பயன்படுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவது தானே விளக்கு ஏற்றுவது. இங்கே விளக்கு ஏற்றுவதும், டார்ச்லைட் அடிப்பதும் அதுதானே. 1.5 மில்லியன் மக்கள் விளக்கை ஏற்றினால் அந்த லைட் எனர்ஜி, எந்த அளவுக்கு கிருமியை அழிக்கும் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.
இதையெல்லாம் விடுங்கள் நாம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அல்லது ஒரு ராக் ஷோவிற்குப் போனால் அங்கு நாம் செல்போன் லைட் அடிக்கிறோம். அதுபோன்று நினைத்துக் கொள்ளுங்கள். நமக்கு ஒரு வேண்டுதல் இருந்தது என்றால் விளக்கேற்றுவோம். கேண்டில் ஏற்றுவோம், சாம்பிராணி போடுவோம். இது எல்லா மதத்தினரும் கடைப்பிடிக்கும் ஒரு விஷயம்தான். வேண்டுதலுக்காக விளக்கேற்றும் பொழுது நம் நாட்டுக்காக விளக்கேற்றுங்கள் என்று பிரதமர் கூறுவதும் நியாயம் தானே. அதனால் இன்று விளக்கை ஏற்றி தான் பார்ப்போமே. "பி. பாசிட்டிவ் கரோனா நெகட்டிவ்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'வீட்டில் அமர்ந்து கொண்டே நாட்டை காக்கும் அரிய வாய்ப்பு'- நடிகை மீனா!