ETV Bharat / sitara

அவமானங்களைத் தாண்டி வென்ற  'தளபதி' விஜய்!

ரசிகர்களின் தலைவனாக செயல்பட்டுவரும் நடிகர் விஜய் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

தளபதி விஜய்
author img

By

Published : Jun 22, 2019, 2:25 PM IST

Updated : Jun 22, 2019, 3:38 PM IST

தந்தை பின்புலத்தில் வந்த கதாநாயகன், முக அழகும் கிடையாது, நடிகருக்கான தோற்றமும் கிடையாது என விமர்சிக்கப்பட்டவர் ரசிகர்களால் தளபதி என்றழைக்கப்படும் ஜோசப் விஜய். ஆனால், இன்று அவர் திரையில் தோன்றினால் ரசிகர்களை மயக்கும் வித்தை கொண்டவராகவும், குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக் கூடிய வெற்றி நாயகனாகவும் வலம்வருகிறார்.

மெர்சல் விஜய்
மெர்சல் விஜய்

இவர் பெயரைச் சொன்னால் போதும் கொண்டாட்டமே அதிரவைக்கும். கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிர்பந்தமாய் இருக்கும் விஜய், ரசிகர்களின் கரகோஷங்களின் நடுவே நடந்து வந்தால் அரங்கமே அதிரும். 'என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே' என்னும் அந்த ஒற்றைச்சொல் அவரது ரசிகர்களை கட்டிப்போடும் மந்திரச்சொல்.

ரசிகர்களுடன் விஜய்
ரசிகர்களுடன் விஜய்

மவுனமாய் இருந்து தமிழ் மக்களை கடந்து கேரளா, ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கிறார் விஜய். இவர் தற்போது பாக்ஸ் ஆபிஸின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். இன்று அவரது 45ஆவது பிறந்த நாளை சரவெடியாய் விஜய் ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர். தமிழ் சினிமாவில் வெற்றிகளையும், தோல்விகளையும் யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் இளைய தளபதியாக இருப்பவரை 'தரணி ஆள வா தளபதியே' என்று அழைக்கும் அளவிற்கு அவரது உச்சம் தொட்ட தளபதியாக வளர்ந்துள்ளார்.

நடிப்பையும் தாண்டி அரசியலுக்கு வர அச்சாரம் போடும் இவர், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறார். படிக்க பணம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை படிக்க வைத்துள்ளார்.

இவரைப்பற்றி கூறினால் பட்டியல்கள் ஏராளம் நீளும். ஆனால், அவர் மீதான வெறுப்பு விமர்சனத்தை தாண்டி பொதுவுடமை நாயகனாக அவரை பாருங்கள் எல்லோருக்கும் பிடித்த செல்லப்பிள்ளையாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பார். ஒரு இயக்குநரின் மகன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வளர்ந்திருப்பது எல்லோரையும் வியக்கவைக்கிறது. விமர்சனங்கள் மூலம் வளர்ந்த தளபதி விமர்சனங்களால் வெற்றிகளைப் பெற்றார்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

அவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'நம்மை சிலர் உசுப்பேத்தும்போது உம்முன்னு, கடுப்பேத்தும்போது கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்'. இது விஜயை விமர்சிப்பவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். தனது 10 வயதில் திரை முன்பு நடிக்க ஆரம்பித்தவர் 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகனாக தோன்றினார். அவர் நடித்த முதல் படத்திலேயே பலவிதமான அவமானங்களை சந்தித்தார். பத்திரிகை நாளிதழ்கள் அவரது முக தோற்றத்தை கடுமையாக விமர்சித்தன. அன்றைய காலகட்டத்தில் புரட்சி இயக்குநர் என்று பெயர்பெற்ற எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஜோசப் விஜய்க்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 'இது ஒரு முகம் இதைப்பார்க்க காசு கொடுத்து பார்க்கணும்' என்று பிரபல நாளிதழில் செய்திகள் வந்ததாக விஜயின் தந்தை சந்திரசேகரே கூறியுள்ளார்.

இன்று அதே நாளிதழ் அவரது புகைப்படத்தை அட்டையின் முதல் பக்கத்தில் வெளியிட்டு பல லட்சம் பிரதிகளை விற்று லாபம் பார்க்கிறது. இது வெற்றியல்ல தோல்வியில் கிடைத்த பாடம். நடிப்பைத் தாண்டி விஜய் நடனத்தில் புலியாக திகழ்ந்தார். இவரது தந்தை இயக்கிய மாண்புமிகு மாணவன், தேவா, ரசிகன் ஆகிய படங்களில் இவர் ஆடிய நடனம் அப்பொழுது இருந்த உச்ச நடிகர்களையும் புருவம் உயர்த்தவைத்தது.

மெர்சல் பட பாடல்
மெர்சல் பட பாடல்

நடிப்பை மட்டுமே செய்யும் நடிகர்கள் நடனத்தில் கை, காலை ஆட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அதனை மாற்றியமைத்தவர் விஜய்தான். 90களுக்கு பிறகு வந்த நடிகர்கள் அனைவரும் நடிப்பையும் தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதற்கு முதல் அச்சாரம் போட்டது விஜய்தான்.

தமிழ் சினிமாவில் விஜயை பின்பற்றி வந்த நடிகர்களில் பலர் உள்ளனர். தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்தார். துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, பிரியமுடன் ஆகிய படங்களில் தாய்மார்களை கவர்ந்தார். முக்கியமாக துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் அதிக பெண் ரசிகர்கள் கிடைத்தனர். தனது தங்கை இறந்துபோன சோகத்தை தீர்க்க பல தங்கைகள் அவருக்கு ரசிகையாக படையெடுத்தனர்.

ஆண்களைப் போல் பெண்களும் ரசிகை மன்றத்தை வைத்தனர். இதைத்தொடர்ந்து இவர் நடித்த காதலுக்கு மரியாதை அனைத்து ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக இருக்கிறது. 'குஷி' விஜய்க்கு வெள்ளிவிழா கொண்டாடிய படமாக இருக்கிறது. இப்படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யா என்னும் இனிய நண்பர் கிடைத்தார்.

விஜய் திருமண நிகழ்வு
விஜய் திருமண நிகழ்வு

விஜய் படப்பிடிப்பில் அமைதியானவர், யாரிடமும் பேசமாட்டார் என நமக்கு தெரிந்த, கேள்விப்பட்ட, பிற நடிகர், நடிகைகள் கூறி கேட்டுள்ளோம். ஆனால் அவர் நல்ல நகைச்சுவையாளர். அதிக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்ட விஜய், புவியியல் பற்றிய ஆராய்ச்சிகளை தெரிந்துகொள்ள பேரார்வம் கொண்டவராக இருக்கிறார்.

சர்கார் விஜய்
சர்கார் விஜய்

சர்ச்சைகளின் மூலம் பாடம் கற்றுக்கொண்ட 'தலைவா' விஜய்

திருப்பாச்சி. சிவகாசி, கில்லி, போக்கிரி உள்ளிட்ட பல படங்கள் கொடுத்த வெற்றி விஜய்க்கு கமர்ஷியல் நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தன. இதனையடுத்து துப்பாக்கி 100 கோடி வசூலை வாரித் தந்தது. இப்படத்தின் வெற்றியின் மூலம் வசூல் மன்னனாக வாகை சூட்டப்பட்டார். 2009களில் தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தின் மூலம் அரசியல் பாதைக்கும், வெற்றியை தொடர முயன்றார். ஆனால் அப்படம் அவருக்கு எதிர்பாராத சறுக்கல்களை தந்தது. அப்படத்தில் இடம்பெற்ற 'தலைவன் ஆவதற்கான சரியான நேரம் இதுதான்' என்ற வாசகம் இடம்பிடித்ததால் பெரும் இழப்பை சந்தித்தார். அது எதிர்பாராத பேரிடியாக இருந்தது.

தலைவா பட போஸ்டர்
தலைவா பட போஸ்டர்

நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி எல்லோரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தானே, விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று அவரது ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக கொந்தளித்தனர். இப்படத்தில் வெடித்த சர்ச்சையின் மூலம் விஜய்க்கு ஆதரவுகள் பெருகின. வெற்றிபெற வேண்டிய தலைவா தோல்வியைத் தழுவியது. தாமதமான இப்படத்தை தொடர்ந்து, காவலன், மெர்சல், சர்கார் வரை சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. மெர்சல் படத்தில் விஜய்யை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஜோசப் விஜய் என்று மதச்சாயம் பூசினார்.

விஜய்
விஜய்

இந்த சர்ச்சையின்போது, எலியும் பூனையுமாக இருந்த விஜய்-அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கேள்வி எழுப்பினர். ஹெச். ராஜாவை வறுத்தெடுத்தனர். தமிழிசைக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது விஜய் தைரியமாக ஜோசப் விஜய் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டார். இந்த நேரத்தில் 'எங்கள் அண்ணன் விஜயை பிரித்து பார்க்காதீங்க, நீ வா தளபதி அரசியலுக்கு, பொறுமையா இருந்தது போதும்' என்று பொறுமையாக இருக்கும் விஜயை சத்தம்போட்டு கூப்பிட ஆரம்பித்தனர். சர்கார் படத்தில் அரசின் இலவச மிக்சி போட்டுடைப்பு என இன்னும் பல சர்ச்சைகளை கடந்து சத்தமில்லாமல் வெற்றிநடைபோட்டு வரும் விஜய் மவுனங்களால் சாதித்துவருகிறார்.

'அரசியலுக்கு வா தளபதி'

ரஜினியுடன் விஜய்
ரஜினியுடன் விஜய்

வெற்றி வாகை சூடும் நாயகன் ஒரு நாள் மக்களின் தளபதியாக தலைவனாகும் நாள் வரும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஸ்டெர்லைட்டில் மக்களின் துயரங்களை பகிர்ந்துகொண்டார். அனிதா மரணத்தின்போது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஜல்லிக்கட்டில் மக்களோடு மக்களாய் நின்று வேடிக்கை பார்த்தார்... இவையெல்லாம்தான் அவரை பக்குவப்படுத்தியுள்ளது. நல்ல பேச்சாளராகவும், தோழனாய் பழகும் நற்குணமும்தான் விஜயை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உங்களை விட்டா எனக்கு யார் நண்பா இருக்கா என்று மனதை மயக்கும் பேச்சும்தான் அவரை தளபதி என்று அழைக்க வைத்துள்ளது.

அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

என் வளர்ச்சியைப் பற்றி குறை கூறுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை; என்னை குறை கூறுபவர்கள் யார் என்று பார்க்க முடியாத தூரத்தில் நான் இருக்கிறேன். அப்படி திட்டினால் அவனும் என் தோழன்தான் என்று மெல்லிய சிரிப்புடன் அடக்கத்துடன் பேசுவதுதான் அவரது இயல்பு.

ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கும் தளபதிக்கு ஈடிவி பாரத் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 22, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.