'8 தோட்டாக்கள்', 'ஜீவி' போன்ற திரைப்படங்களின் மூலம் தனது இயல்பான நடிப்புக்காக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் வெற்றி. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'ஜீவி' படத்திற்குப்பின், தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டானார்.
தற்போது ஹேமம்பர் ஜஸ்தி இயக்கத்தில் 'C/o காதல்' என்னும் திரைப்படத்தில் வெற்றி நடித்துவருகிறார். தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கான இத்திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகிவரும் இத்திரைப்படம் மெமரீஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காந்தி தேசத்திற்கு வரவேற்கிறோம் - ட்ரம்பை வரவேற்ற ரஹ்மான்