நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள, 'அயலான்', 'டாக்டர்' ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதனையடுத்து அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவரும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் நடைபெற்றது. ஆனால் அங்கு அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதால், 'டான்' படக்குழுவினருக்கு வருவாய்த் துறையினர் 19,400 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஆக.12) காலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிமலை முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆனைமலையில் உள்ள மாசானி அம்மன் கோயிலுக்குச் சென்று சிவகார்த்திகேயன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ’டான்’ படக்குழு மீது வழக்குப்பதிவு