ETV Bharat / sitara

நாளை வெளியாகிறது மாதவனின் ’மாறா’ டிரைலர்! - திலீப் குமார்

மாதவன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள மாறா திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.

film
film
author img

By

Published : Dec 28, 2020, 1:39 PM IST

மலையாளத்தில் 2015ல் மார்ட்டின் பிரகத் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடித்து ஹிட்டடித்த திரைப்படம் சார்லி. ஒரு கவிதை போல கல்ட் திரைப்படமான இது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், இதில் வரும் சார்லி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில், விக்ரம்-வேதா ஜோடியான மாதவன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மாறா படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவகங்கை ராணியின் வரலாறு: தைத்திருநாளில் படப்பிடிப்புத் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.