ETV Bharat / sitara

'ஜீவா - மிர்ச்சி சிவா கூட்டணி சிறப்பான நகைச்சுவையானது' - இயக்குநர் பொன்குமரன்

ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும் என 'கோல்மால்' பட இயக்குநர் பொன்குமரன் தெரிவித்தார்.

golmaal
golmaal
author img

By

Published : Oct 11, 2021, 9:16 AM IST

இயக்குநர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் பொன்குமரன். இவர் தமிழில் 'கோல்மால்’ என்னும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா - மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கின்றனர். ‘மிருகா' படத்தைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோ சார்பில் வினோத் ஜெயின் தயாரிக்கின்றார். அருள் தேவ் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் இசையமைக்கின்றார். கவிஞர்கள் மதன் கார்க்கி, விவேகா பாடல்களை எழுதுகின்றனர்.

golmaal
கோல்மால்

இப்படத்தில் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பொன்குமரன், நடிகர்கள் ஜீவா, சிவா, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பொன்குமரன் பேசியதாவது, "முழு நீள நகைச்சுவையுடன் கூடிய குடும்பப் பொழுதுபோக்குப் படமாக கோல்மால் இருக்கும். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும். ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்.

golmaal
கோல்மால்

ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். அதிக பொருள்செலவில் படம் முழுவதும் மொரீஷியஸில் படமாக்கப்படும். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கன்னட திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்ற தமிழர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.