ETV Bharat / sitara

'வேறொருவரைக் காதலிக்கும் சனம் ஷெட்டியுடன் நான் எப்படி வாழ முடியும்' - ’பிக்பாஸ்’ தர்ஷன் - பிக்பாஸ்

சென்னை: பிக்பாஸ் புகழ் தர்ஷன் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகாரளித்திருந்த நிலையில், அது குறித்து நடிகர் தர்ஷன் விளக்கமளித்துள்ளார்.

darshan
darshan
author img

By

Published : Feb 1, 2020, 2:35 PM IST

Updated : Feb 1, 2020, 3:16 PM IST

திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் மீது நடிகை சனம் செட்டி காவல் துறையில் நேற்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் தர்ஷன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அப்போது அவர், "பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்தில் நான் நடித்தபோது, சனம் ஷெட்டி எனக்கு அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் சினிமா தொழில் சார்ந்து எனக்கு சனம் ஷெட்டி அதிக அளவில் உதவிகளை செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக எனக்காக அவர்தான் அப்ளையும் செய்தார். அதை நான் என்றைக்கும் மறைக்கவோ, மறக்கவோ மாட்டேன்.

நான் நடித்த போத்திஸ் விளம்பரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக என்னை விஜய் டிவி தரப்பில் பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக அழைத்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பின்னர், நான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படங்களில் அவரை கதாநாயகியாக்க என்னை வற்புறுத்தினார். அதை நான் மறுத்ததால் தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து என் வாய்ப்பைக் கெடுக்க முயன்றார். அவரை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்.

தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாததால், அவருடனான உறவை நான் முறித்துக் கொண்டேன்” என்றார்.

நான் நடிக்கும் படங்களில் அவரை நாயகியாக்க சனம் ஷெட்டி வற்புறுத்தினார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றபோது, சனம் ஷெட்டி வேறு ஒருவருடன் நெருங்கி பழகியதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தர்ஷன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “அந்த நபர் யார் என்பதைக் கூற இயலாது. இதற்குப் பின் நான் எப்படி அவருடன் வாழ முடியும். எங்கள் இருவருக்கும் நிச்சயமானது சனம் வீட்டாருக்கு மட்டுமே தெரியும். என் வீட்டிற்கு தெரியாது. காரணம் எனக்கு ஒரு தங்கை இருந்ததால், முதலில் அவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்று எண்ணினேன்.

சனம் ஷெட்டி எனக்கு மூன்றரை லட்சம் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தையும் பிக்பாஸ் பணம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். சனம் ஷெட்டி ஆரம்பக் காலத்தில் எனக்கு செய்த உதவிக்கு நன்றியுடன் நான் உள்ளேன். ஆகையால், அவர் மீது நான் வழக்குத் தொடர மாட்டேன். காவல் துறையில் கேட்டால் வீடியோ வாய்ஸ் ரெக்கார்டர் போன்ற ஆதாரங்களை சமர்பிப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனக்கு நியாயம் வேணும் - தர்ஷன் மீது புகாரளித்த பின் சனம் ஷெட்டி

Intro:நடிகை சனம் ஷெட்டி மீது தான் வழக்கு தொடர மாட்டேன் தேவை என்றால் விளக்கம் அளிப்பேன்- நடிகர் தர்ஷன்Body:திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் செட்டி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் தர்ஷன் சென்னை தி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். தர்ஷன் பேசுகையில்,

நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம்.
2016ல் சென்னைக்கு வந்தேன்,ஒரு புரோடக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கினேன்.இந்தத் துறைக்கு பைக்கை வித்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தேன்,

பச்சைப்பா சில்க் விளம்பரத்தில் நான் நடித்தபோது சனம் ஷெட்டி எனக்கு அறிமுகமானார் .

ஆரம்ப காலங்களில் சினிமா தொழில் சார்ந்து எனக்கு சனம் ஷெட்டி அதிக அளவில் உதவிகளை செய்துள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எனக்காக அவர் அப்ளை செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்கவும் மாட்டேன் மறக்கவும் மாட்டேன்.

நான் நடித்த போத்திஸ் விளம்பரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் காரணமாக என்னை விஜய் டிவி தரப்பில் பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக அழைத்தர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.
பிக் பாசில் இருந்து வெளியே வந்த பின்னர் ஒரு மாதத்திற்கு என் ஃபேஸ்புக் பக்கத்தை சனம் தான் பயன்படுத்தி வந்தார்.
தான் நடிக்கும் படங்களில் தன்னை கதாநாயகியாக வற்புறுத்தினார். அதை நான் மறுத்ததால் தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து என் வாய்ப்பைக் கெடுக்க முயன்றார். தன்னை உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் வற்புறுத்தினார் தவறினால் தற்கொலை செய்து கொள்வேன் என் அவர் என்னை மிரட்டினார்.சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை அதனால் பிரேக்கப் கூறி விட்டேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து விட்டு நான் வெளியே வந்தபோது அவர் மற்றொருவருடன் இருந்தார்,அதற்கான் அதராம் உள்ளது,அந்த நபர் யார் என்பது கூற முடியாது. இதற்கு பின் நான் எப்படி அவருடன் வாழ முடியும்.

சனம் வீட்டார்க்கு மட்டுமே நிச்சயம் ஆனது தெரியும்,என் வீட்டிற்கு அது தெரியாது,காரணம் எனக்கு ஒரு தங்கை இருந்ததால் முதலில் அவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்று எண்ணினேன் .

சனம் ஷெட்டி எனக்கு மூன்றரை இலட்சம் கொடுத்திருந்தார் அந்த பணத்தையும் பிக்பாஸ் பணம் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டேன் .

சனம் ஷெட்டி ஆரம்பகாலத்தில் எனக்கு செய்த உதவிக்கு அவர் அவர் மீது நன்றியுடன் நான் உள்ளேன், ஆகையால் வழக்கு நான் தொடார மாட்டேன்.
காவல்துறையில் கேட்டால் வீடியோ வாய்ஸ் ரெக்கார்டர் போன்ற ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்

Conclusion:என்னை பொறுத்த வரை அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை,
விளக்கம் கொடுக்க தான் இந்த சந்திப்பு.
Last Updated : Feb 1, 2020, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.