ETV Bharat / sitara

தனுஷின் புதிய படத்தில் இணையும் ராஷி கண்ணா - பிரியா பவானி சங்கர்?

author img

By

Published : Aug 2, 2021, 11:09 AM IST

தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush
Dhanush

தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.

தனுஷின் 44ஆவது படமாக இது இருப்பதால் தற்காலிகமாக இதனை '#D44' என அழைக்கப்படுகிறது. தற்போது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.

சில நாள்களில் முடிவடையும் இப்படப்பிடிப்பைத் தொடர்ந்து தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கும் '#D44' படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கல்லூரி பருவம் அதன்பின் உள்ள வாழ்க்கை என இரு காலகட்டத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் தற்போது ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தனுஷ் - ஜவஹர் கூட்டணியில் மூன்று கதாநாயகிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.