'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தாணு தயாரித்துள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள ஊர்களில் பிரமாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நிறைவுற்று தற்போது இறுதி கட்டப் பணிகளில் உள்ளது.
-
Here we go ! Here is #ThattaanThattaan from #Karnan. Thank you @dhanushkraja sir for the soulful singing. @theVcreations @mari_selvaraj https://t.co/eXxYag2q4k
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here we go ! Here is #ThattaanThattaan from #Karnan. Thank you @dhanushkraja sir for the soulful singing. @theVcreations @mari_selvaraj https://t.co/eXxYag2q4k
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 11, 2021Here we go ! Here is #ThattaanThattaan from #Karnan. Thank you @dhanushkraja sir for the soulful singing. @theVcreations @mari_selvaraj https://t.co/eXxYag2q4k
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 11, 2021
இப்படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்' ஆகிய பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலான 'திரௌபதியின் முத்தம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை தனுஷே பாடியுள்ளார். இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூகவலைதளத்தில் வரவேற்பை பெற்றுதுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி 'கர்ணன்' படத்தைத் திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.