ETV Bharat / sitara

அடுத்த இளைய தளபதி இவர்தான் -ஆனந்த்ராஜ் - interested to act vijay film

'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ஆனந்த்ராஜ் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை இளையதளபதி எனக் கூறியது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

vijay
author img

By

Published : Sep 20, 2019, 8:50 AM IST

Updated : Sep 20, 2019, 9:55 AM IST

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பிகில்'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, ஆனந்த்ராஜ், கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று மாலை (செப். 19) படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஆனந்த்ராஜ், விவேக், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. சுபஸ்ரீ மரணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் ஆனந்த்ராஜ் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், "நடிகர் விஜய்யுடன் பல படங்களில் நடித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் அவரும் அண்ணன்-தம்பி போல பழகிவருகிறோம். இதே போன்று 'இளைய தளபதி' விஜய் மகன் சஞ்சய்யுடனும் சேர்ந்து நடிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஜாசன் சஞ்சய்
ஜாசன் சஞ்சய்

இளைய தளபதியாக இருந்த விஜய் மெர்சல் படத்திலிருந்து ரசிகர்களால் 'தளபதி' என அழைக்கப்படுகிறார். இந்தச் சூழலில், நடிகர் ஆனந்த்ராஜ் விஜய் மகனை இளைய தளபதி என அழைத்திருப்பது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமல்லாமல் அரங்கமே அதிர்ந்தது.

Intro:Body:

actor anand raj interested to act vijay film

Conclusion:
Last Updated : Sep 20, 2019, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.