ETV Bharat / sitara

அப்போ வாடகை கார்... இப்போ ஆட்டோ... மாஸ்காட்டும் தல அஜித்! - அஜித்தின் வலிலமை

சென்னை: நடிகர் அஜித் ஆட்டோவில் பயணிக்கும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ajith
ajith
author img

By

Published : Mar 19, 2021, 3:42 PM IST

நடிகர் அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகிறது.

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் சாகசத்தில் ஈடுபடுவது, ஃபோட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாகச் செயல்பட்டுவருகிறார்.

இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றுவருகிறார். இதற்காக எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப்பில் அஜித் அவ்வப்போது வந்துசெல்வார். சமீபத்தில் பயிற்சிக்காக வாடகை காரில் வந்த அஜித்தை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

ஆட்டோவில் செல்லும் அஜித்

சமீபத்தில் அஜித் சென்னை ரைஃபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டியில் சீனியர் பிரிவில் கலந்துகொண்ட அஜித் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

இதனையடுத்து அவருக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அஜித் சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்யும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.