ETV Bharat / sitara

ரன்வீர் சிங்கின் '83' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உலக கோப்பையை வென்ற இந்தியா

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள '83' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

Ranveer Singh
Ranveer Singh
author img

By

Published : Nov 26, 2021, 12:43 PM IST

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இதேபோல் அத்தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். '83' படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

'83' படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை கமல் ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது.

கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம் கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல முறை வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. தற்போது இப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 26) 83 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ட்ரெய்லர் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க: '83' ஆட்ட நாயகர்கள் ரன்வீர் சிங், ஜீவா புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.