ETV Bharat / sitara

பிரியங்கா சோப்ராவின் நினைவுக் குறிப்பு புத்தகம் விரைவில் வெளியீடு! - பாலிவுட் செய்திகள்

கரோனா ஊரடங்கு காலத்தை சரிவரப் பயன்படுத்தி, தன் நினைவுக் குறிப்புகள் அடங்கிய ’அன்ஃபினிஷ்ட்’ எனும் புத்தகத்தை தொகுத்து முடித்துள்ள பிரியங்கா சோப்ரா, விரைவில் அதனை வெளியிட உள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
author img

By

Published : Aug 11, 2020, 4:43 PM IST

பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது நினைவுக் குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட இருப்பதாக முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், ’அன்ஃபினிஷ்ட்’ எனும் பெயரில் தற்போது அப்புத்தகம் வெளிவரவுள்ளது.

பிரியங்கா சோப்ரா தன் வாழ்வில் எழுதிய தனிப்பட்ட கட்டுரைகள், கதைகள், அவதானிப்புகள் உள்ளிட்டவற்றை அடக்கிய இப்புத்தகம், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.

இப்புத்தக வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரியங்கா, " ’அன்ஃபினிஷ்ட்’ முடிக்கப்பட்டு இறுதி வடிவம் அச்சுப்பிரதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நினைவுக் குறிப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எனது வாழ்க்கையில் என்னுள் நிகழ்ந்த உரையாடல்கள், பிரதிபலிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Unfinished is finished! Just about sent in the final manuscript! Wheee! Cannot wait to share it with you all. Every word in my memoir comes from a place of introspection and reflection into my life. #ComingSoon #unfinished

    — PRIYANKA (@priyankachopra) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் உடன் ’மேட்ரிக்ஸ் 4’ திரைப்படத்தில் இணைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பிய பிரியங்கா, நெட்ஃபிளிக்ஸின் ’வி கேன் பி ஹீரோஸ்’ (We Can Be Heroes) திரைப்படத்திலும், ’சிட்டடல்’ (Citadel) எனும் அமேசான் சீரிஸிலும் அடுத்தடுத்து தோன்றவுள்ளார்.

மேலும், தனது கணவர் நிக் ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும், இந்தியத் திருமணங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகள் குறித்த ’சங்கீத்’ எனும் அமேசானின் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க : ஹாலிவுட் கனவு நாயகனுடன் அடுத்த படம் : உற்சாகமாக ஷூட்டிங்கை தொடங்கியுள்ள பிரியங்கா சோப்ரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.