ETV Bharat / sitara

'தில் பேச்சாரா' படம் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு!

author img

By

Published : Jul 22, 2020, 7:18 PM IST

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படமான 'தில் பேச்சாரா' வெளியாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில் பேச்சாரா
தில் பேச்சாரா

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. சுஷாந்த் சிங்கின் மறைவையொட்டி இத்திரைப்படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில், இலவசமாகக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ட்ரெய்லரும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது இப்படம் ஜூலை 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'தில் பேச்சாரா' திரைப்படத்தைப் பார்வையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பார்த்து ரசிக்கும் வகையில் ஒளிபரப்ப உள்ளோம் என படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ”பொதுவாக OTT தளத்தில் திரைப்படங்கள் நள்ளிரவில் வெளியாகும். எனவே படங்களை ரசிகர்கள் அவர்களுக்கான நேரத்தில் பார்ப்பார்கள்.

ஆனால், எங்களது படத்தைப் பார்வையாளர்கள் தங்களது அனைத்து வேலைகளும் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தங்களது குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்பினோம். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் இருப்பவர்களும் அதே நேரத்தில் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்” என்று கூறினார்.

இயக்குநர் முகேஷ் சோப்ரா கூறுகையில், ”இந்த படத்தை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பார்ப்போம். சுஷாந்த் வானத்திலிருந்து நம் அனைவருடன் சேர்ந்து இப்படத்தைப் பார்ப்பார் என எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.