மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் மீது 2018 அக்டோபர் மாதம் மீடூ புகார் எழுப்பப்பட்டது. தில் பேச்சாரா படத்தில் அவருடன் இணைந்து நடித்த சஞ்சனா சங்கியிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என கூறப்பட்டது. இதனால் அவர் தூக்கமிழந்து திரிந்தார் என சுஷாந்த் நடித்த பவித்ரா ரிஷ்தா தொடரை இயக்கிய கவுசல் சவேரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுசல் தனது இன்ஸ்டா பக்கத்தில், 2018 முதல் 2019 பிப்ரவரி வரை நான் சுஷாந்துடன் தங்கியிருந்தேன். 2018 அக்டோபர் மாதம் அவர் மீது மீடூ புகார் எழுந்தபோது அவர் தூக்கமின்றி காணப்பட்டார். நாங்கள் சஞ்சனா சங்கியை தொடர்புகொள்ள முயன்றோம், அவர் அப்போது அமெரிக்கா சென்றிருந்தார். அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. சுஷாந்த் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியது யார் என அவருக்கே தெரியும், ஆனால் அதை நிரூபிக்க அவரிடம் சாட்சி இல்லை. சஞ்சனா இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் 4 நாட்கள் தூங்காமல் இருந்தார். 5ஆவது நாளாக சுஷாந்த் எந்த தவறும் செய்யவில்லை என சஞ்சனா இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சுஷாந்தை தவறானவராக சித்தரித்த நபர் கூட அவர் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால், சுஷாந்த் மரணத்துக்கு நிச்சயம் நீதி வேண்டும் என பதிவிட்டுள்ளார்.