ஹைதராபாத்: உலக அழகியாக பட்டம் வென்ற பிறகு, இயக்குநர் ஒருவர் தனது அழகை அட்ஜெஸ்ட் செய்ய சொன்னது பற்றி தனது வாழ்க்கை குறித்த அன்ஃபினிஷ்ட் என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் புகழ் பெற்ற நாயகியாக உருமாறியுள்ளார். இவர் தனது வாழ்க்கையை திரும்பிபார்க்கும் விதமாகவும் அன்ஃபினிஷ்ட் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், உலக அழகியாக பட்டம் வென்ற பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் இயக்குநர் ஒருவர் எனது அழகை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அட்ஜெஸ்ட் செய்யுமாறு அறிவுறுத்தியது பற்றி எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா கூறியிருப்பதாவது:
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான அவர் என்னிடம் சில நிமிடங்கள் பேசிய பிறகு, என்னை எழுந்து நின்று முழு அழகையும் பார்க்கும் விதமாக சுற்றி நிற்குமாறு சொன்னார். அதன்படி செய்தேன். பின்னர் என்னை கூர்ந்து பார்த்த அவர், கூடுதலாக அழகைப் பெற எனது உடலில் நான் செய்ய வேண்டிய அட்ஜெஸ்ட்மெண்டுகள் குறித்து தெரிவித்தார்.
எனது முன்னழகு, தாடை, பின்னழகு ஆகியவற்றை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து சரி செய்யுமாறு ஆலோசனை வழங்கினார் என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கை குறித்து குறிப்பிட்டிருக்கும் அவர், ஆணாதிக்கம் மிக்க பொழுதுபோக்கு துறையில், பெண்ணாக இருந்ததால் எப்போதும் கடினமானவராகவே இருந்தேன்.
நாம் நமது பலவீனத்தை வெளிப்படுத்தினால், நம்மை கீழே தள்ளிவிட்டு ரசிப்பதற்கு பலர் இருக்கிறார்கள். எனவே உயரத்தை தொடுவதற்கு என்ன தேவையோ அதைக் கற்று, அதற்கான வேலையை மட்டும் செய்தேன்.
தற்போது அனுபவமும், முதிர்ச்சியும் அடைந்துள்ளேன். தன்னம்பிக்கையும் நிறைந்திருப்பதால் இதைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக விவாதிக்கிறேன். எனது கண்களில் இருந்து எனது வாழ்க்கையின் கதையை இதில் குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி எந்த விதமான விளக்கத்தையும் இதன் மூலம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தனது வாழ்க்கை பற்றி விவரிக்கும் இந்தப் புத்தகம் சாதிக்க நினைப்பவர்களுக்கும், தனது லட்சியம், கனவுகளை நோக்கி பயணிப்பவர்களுக்கும் சிறந்த உந்துதலாக அமையும் என நம்புகிறாராம் பிரியங்கா.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்ட நடிகை லட்சுமி மஞ்சு 100 கி.மீ. சைக்கிள் பயணம்!