திரையுலக வரலாற்றில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்தவகையில், திரையுலகம், அரசியல், வேளாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையைத் தழுவி திரைப்படங்கள் உருவாகின்றன.
குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி, நடிகை சாவித்ரி, கிரிக்கெட் வீரர் தோனி, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் என்டிஆர், ராஜசேகர் ரெட்டி உள்ளிட்ட பலரது வாழ்க்கையையும் மையமாக வைத்து ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகிவருகின்றன.
இந்த நிலையில், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது. விஞ்ஞான அறிவியல் துறையில் சாதனை படைத்து உலக அரங்கில் இந்தியாவுக்குப் புகழ்பெற்றுத் தந்த அப்துல் கலாமின் இளமைப் பருவம்முதல் முதுமைப் பருவம்வரை அவரது வாழ்க்கைப் பயணத்தை இந்தப்படம் சித்திரிக்கவுள்ளது.
இந்தப்படத்தில் அப்துல் கலாமாக பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். அபிஷேக் அகர்வால், அனில் சங்கரா ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தி, ஆங்கில மொழிகளில் தயாராகவுள்ள இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் பரேஷ் ராவல், 'அப்துல்கலாம் ஒரு புனிதர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். நற்பேறாளனும்கூட, அப்துல்கலாம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் அவராக நடிக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
-
In my humble opinion he was SAINT KALAM !i am so blessed and fortunate that I will be playing KALAM Saab in his biopic . https://t.co/0e8K3O6fMB
— Paresh Rawal (@SirPareshRawal) January 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In my humble opinion he was SAINT KALAM !i am so blessed and fortunate that I will be playing KALAM Saab in his biopic . https://t.co/0e8K3O6fMB
— Paresh Rawal (@SirPareshRawal) January 4, 2020In my humble opinion he was SAINT KALAM !i am so blessed and fortunate that I will be playing KALAM Saab in his biopic . https://t.co/0e8K3O6fMB
— Paresh Rawal (@SirPareshRawal) January 4, 2020
எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் - சல்மான் கூறிய கதை