ETV Bharat / sitara

3ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத கங்கனா

மும்பை: நடிகை கங்கனாவும் அவரது சகோதரியும் காவல் துறையினர் விசாரணைக்காக மூன்றாவது முறையாக நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாமல் உள்ளனர்.

kangana
kangana
author img

By

Published : Nov 23, 2020, 2:56 PM IST

கடந்த சில மாதங்களாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பல்வேறு பிரச்னைகளில் சிக்கிவருகிறார். இவரின் சர்ச்சை கருத்துகளுக்குப் பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா, அவரது சகோதரி ரங்கோலி சமூக வலைதளத்தில் பதிவுசெய்த கருத்துகள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்த்ரா மாஜிஸ்திரேட் மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கங்கனா, அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக அக்டேபர் 26, 27ஆம் தேதி, நவம்பர் 10ஆம் தேதி என இரு முறை அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால் அப்போது கங்கனாவின் சகோதருக்கு திருமணம் நடைபெற்றதால் அவரால் விசாரணைக்கு வர முடியாது என கங்கனாவின் வழக்கறிஞர்கள் மும்பை காவல் துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு நேரில் ஆஜராக நவம்பர் 18ஆம் தேதி மும்பை காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால் இன்று கங்கனாவும் அவரது சகோதரியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கங்கனா இந்த வழக்கு குறித்து முன்பிணை பெற அவர் உயர் நீதிமன்றத்தை நாடக்கூடும். அதனாலேயே அவர் விசாரணைக்கு ஆஜராக மறுக்கிறார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.