மும்பை: ஜெயலலிதா வேடமேற்று நடித்த நடிகை கங்கனா, எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று (ஜன.17) அவருக்கு மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜெயலலிதா வேடமேற்று நடித்த நடிகை கங்கனா அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், எம்ஜி ராமச்சந்திரன், 50 ஆண்டுகள் திரைத்துறையிலும் அரசியலிலும் பங்காற்றி தமிழ்நாடு மக்கள் தலைவரானவர். பல லட்சம் மக்களின் கடவுள். மக்களின் தலைவியை மக்களுக்கு அளித்த தலைவர், பாரத் ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரை நினைவுகூருவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">