ETV Bharat / sitara

சர்ச்சை...வதந்தி...கடின உழைப்பு...பத்மஸ்ரீ 'பாலிவுட் ராணி' கங்கனா ரணாவத்

author img

By

Published : Mar 6, 2020, 12:01 AM IST

சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரம், வரலாற்று கதாபாத்திரத்தை மீண்டும் அழகாக திரையில் கொண்டு வந்து ரசிகர்கள் மனதில் நிறுத்தியவர்களில் ஒருவர் கங்கனா ரணாவத். பாலிவுட் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா நாட்டின் நான்காவது உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். இவருக்கு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஈடிவி பாரத் வணக்கம் செலுத்துகிறது.

Kangana ranaut womens day special
Celebrating womens day - Kangana ranaut

தமிழில் ஜெயம் ரவியுடன் 'தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா ரணாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பம்ப்லா (Bhambla) நகரத்தில் பிறந்தார். கங்கனா குழந்தை பருவம் முதலே யாரையும் சாரமல் சுயமாக வாழும் மனநிலையில் வளர்ந்துள்ளார். இந்த மனநிலைதான் அவர் 16 வயதில் பம்ப்லாவிலிருந்து கிளம்பி டெல்லியில் வந்து தனியாக வாழ உத்வேகம் அளித்துள்ளது.

இன்று பாலிவுட் ராணியாக கங்கனா வலம் வந்தாலும் பாலிவுட்டில் இவர் முதலில் கால் எடுத்து வைக்க மிகவும் கஷ்டபட்டுள்ளார். பின் 2006 ஆம் ஆண்டு இயக்குநர் அனுராக் பாசுவின் இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ்டர்' படத்தின் மூலம் அறிமுகமானர். முதலில் இப்படத்தில் வேறு ஒருவர் நடிக்க இருந்த நிலையில், அவரால் நடிக்க முடியாமல் போக இறுதியாக கங்கனாவிடம் அரிய வாய்ப்பு வந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு விகாஸ் பஹ்ல் இயக்கத்தில் வெளியான க்யூன் படம் இவரது சினிமா வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் சிறப்பான நடிப்பிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பொதுவாக அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் ரசிக்க செய்யும். க்யூன் கதாபாத்திரத்தின் எளிமை, அவரது அப்பாவி தனமான முகபாவனை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கங்கனா பாலிவுட் ராணியாக வலம் வந்தாலும் சர்ச்சைக்கும் இவரை குறித்த வதந்திக்கும் பஞ்சம் கிடையாது. பாலிவுட்டில் இவர் இருக்கும் சிம்மஹாசனம் மென்மையானதாக இருப்பது கிடையாது. ஹருத்திக் ரோஷனுடனா நட்பு, சமீபத்தில் செக்ஸ் குறித்த இவரது கருத்து போன்றவை பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதையெல்லாம் கடந்து தனது கடின உழைப்பும் அர்பணிப்புடன் தனது வேலைகளை செய்து வருவதால் பாலிவுட்டின் முன்னணி நடிககையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு பெரிய ஃபேர்னெஸ் கிரீம் ஒன்று தனது விளம்பரத்தில் கங்கனா நடிக்க வேண்டும் என விரும்பி அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளது. ஆனால், ஒருவரின் நிறத்தை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை கூறக்கூடாது என்று அந்த விளம்பரத்தில் நடிப்பதை தவிர்த்தார்.

தற்போது இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் 'தலைவி' படத்தில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் 'தேஜஸ்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் மூன்று தேசிய விருதுகள், நான்கு ஃபிலிம் பேர், 2 ஐஃபா விருதுகள் கிடைத்துள்ள நிலையில், அசாதாரண நடிப்பு திறனால் பார்வையாளர்களின் மனதில் நின்ற கங்கனாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்தது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளித்த கங்கனா ராணவத்துக்கு ஈடிவி பாரத் வணக்கம் செலுத்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.