ETV Bharat / sitara

ஆசையாக வந்த ரசிகர்கள்... ஆணவத்துடன் நடந்துகொண்ட கஜோல் - ட்ரோல் செய்யப்படும் கஜோல்

பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த ரசிகர்களிடம் கஜோல் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Kajol
Kajol
author img

By

Published : Aug 6, 2021, 9:34 PM IST

மும்பையில் பிறந்து வளர்ந்து தனது 17 வயதில், 'பெக்குடி' எனும் திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்து முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்த்தை அடைந்தவர், கஜோல்.

இந்தி படங்களில் மட்டுமின்றி தமிழில் 'மின்சாரக் கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகியப் படங்களில் நடித்திருக்கும் அவர் தனது 47ஆவது பிறந்தநாளை நேற்று (ஆகஸ்ட் 5) கொண்டாடினார்.

இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், ரசிகர்களிடம் கஜோல் நடந்துகொண்ட விதம், தற்போது சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று (ஆகஸ்ட்.05) கஜோல் வீட்டிற்கு வெளியே ரசிகர்கள் சிலர் கையில் கேக்குடன் கஜோல் வெளியே வருவதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கஜோல், சிறிது தூர இடைவெளி விட்டு ரசிகர்கள் கொண்டு வந்த கேக்கை வெட்டினார்.

அதன் பின் அதிலிருந்து ஒரு துண்டு கேக்கை எடுக்கச் சொன்னபோது, அதை மறுத்த கஜோல், கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தபின் வீட்டிற்குள் வேகமாக சென்றார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், கஜோல் திமிர்பிடித்த ஆணவம் கொண்ட நபராக மாறியிருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் கஜோலின் பிறந்தநாளுக்கு அவரைப் பார்க்க வெளியே காத்திருந்த குழந்தைகளுக்கு, தன் கைகளால் அந்த கேக்கை எடுத்து கொடுத்திருக்கலாம். ரசிகர்கள் இல்லாமல், பிரபலங்கள் இல்லை எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேறுசிலர், கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கஜோல் இது போன்று நடந்து கொண்டார் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: HBD கஜோல்... கண்களால் கைது செய்த தங்கத் தாமரை மகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.