முசோரி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படப்பிடிப்பு முசோரியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர் உள்ளிட்டோர் முசோரி சென்றிருந்தனர். அப்போது மிதுனுக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சேவோய் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஓய்வெடுக்கும்படி அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், மிதுனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என தெரிவித்தனர்.