தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி கால்நடை மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல் துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது அவர்கள் நான்கு பேரும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு துப்பாக்கி முனையில் தடுத்தனர். அதையும் மீறி தப்பியோடிய அவர்கள் நான்கு பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
தற்போது இந்த நிகழ்வு குறித்து ராம் கோபால் வர்மா 'திஷா என்கவுன்ட்டர்' என்ற பெயரில் ஆனந்து சந்திரா இயக்கிய திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திஷா கதாபாத்திரத்தில் மாடல், நடிகை சோனியா நடித்துள்ளார்.
இப்படம், திஷாவின் நினைவு தினமான நவம்பர் 26 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,
'திஷா என்கவுன்டர்' திரைப்படம் நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கு முதல் பல வழக்குகளின் அடிப்படையில் ஒரு கற்பனைக் கதையை கொண்டு உருவாக்கப்பட்டது எனப் பதிவிட்டுள்ளார்.
'திஷா என்கவுன்ட்டர்' அடிப்படையில் கற்பனை கதை - ராம் கோபால் வர்மா - நிர்பயா வழக்கு
ஹைதராபாத்: 'திஷா என்கவுன்ட்டர்' திரைப்படம் நிர்பயா பாலியல் வன்புணர்வு முதல் பல வழக்குகளின் அடிப்படையில் ஒரு கற்பனைக் கதையை கொண்டு உருவாக்கப்பட்டது என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.