மும்பை: கரோனாவால் கடினமான சூழலில் இருக்கும் அனைவரையும் சிறந்த பொழுதுபோக்கான பாடல்களால் மீட்டெடுக்கும் பணியில் இறங்கியிருப்பதாக பிரபல ராப் பாடகர் பாட்ஷா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் கடினமான சூழல் தற்போது நிலவுகிறது. ஆனாலும் தங்குவதற்கு இடமும், சாப்பிடுவதற்கு உணவும் நமக்கு கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே இந்த அச்சுறுத்தலிருந்து விரைவில் வெளியேற ஆழ்மனதிலிருந்து பிரார்திக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் மக்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன். அனைவரும் எனக்கு அளித்திருக்கும் அன்பின் பிரதிபலனாக அவர்களுக்கு சிறந்த பொழுபோக்கை தரவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தி, பஞ்சாபி மொழி ராப் பாடல்களுக்கு புகழ் பெற்ற பாட்ஷா தமிழில் சூப்பர் ஹிட்டான ஆலுமா டோலுமா பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார்.