1970கள் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேல் பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர் அனில் கபூர். இன்றளவும் பொலிவான தோற்றத்தைக் கொண்டு உடலை கட்டுக்கோப்பாகப் பேணி வரும் அனில் கபூரை, பாலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து ரசித்துக் கொண்டாடி வருகின்றனர்.
64 வயது அனில் கபூர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. இந்தக் காலத்து நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலைப் பேணி வரும் அனில் கபூர், தொடர்ந்து இதற்காக கடும் பயிற்சிகளை செய்து வரும் நிலையில், மிரட்டலான இந்த போட்டோஷூட்டை அவரது ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முன்னதாக அனுராக் காஷ்யப் இயக்கிய ஏகே Vs ஏகே’ தன் மகள் சோனம் கபூருடன் ’அஜுஹா’ படங்களில் தோன்றிய அனில் கபூர், தற்போது ‘ஜக் ஜக் ஜியோ’, ’அனிமல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.