லாஸ் ஏஞ்சல்ஸ்: ட்விட்டரின் புதிய ’வெரிஃபை (Verify)’ நிறம் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அரசியல் தலைவர்கள், பந்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் இனி சாம்பல் நிற டிக்குடன் காணப்படும்.
இந்தப் புதிய அப்டேட் ஏற்கனவே பல ட்விட்டர் கணக்குகளில் பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும், இன்னும் சில அரசியல் தலைவர்களின் முகப்புகளில் இந்தப் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்படாமலே உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், “தாமதத்திற்கு மன்னிக்கவும், அடுத்த வாரம் வெள்ளியன்று புதிய அப்டேட்டான ‘Verified' நிறத்தை வெளியிடவுள்ளோம்.
நிறுவனங்களுக்கு தங்க நிறம், அரசுக்கு சாம்பல் நிறம், தனி நபர் அல்லது நட்சத்திர பிரபலத்திற்கு நீல நிறம் என அனைவருக்குமான 'Verified' டிக் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
ட்விட்டரின் இந்த நீல நிற 'Verified' டிக் மூலம் பல்வேறு போலியான ட்விட்டர் முகப்புகள் ஆரம்பிக்கப்பட்டு குளறுபடிகள் நடந்த நிலையில், எலான் மஸ்க் இந்த புதிய அப்டேடிற்கான முடிவை எடுத்தார். மேலும், இந்த புதிய அப்டேட் குறித்து அவர், ‘இந்த வழிமுறை வலியாக இருந்தாலும், தேவையான ஒன்று தான்’ எனத் தெரிவித்தார்.