ஐஐடி ஹைதராபாத்-இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்யூர் ஈவி தனது அடுத்த படைப்பாக அதிவேக வாகனமான 'Etrance Neo' டிசம்பர் ஒன்றாம் தேதி 2020இல் அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது. இந்த புதிய மாடல் நவீன ஏரோடைனமிக்ஸுடன் இணைந்து செயல்படுவதால் நீண்ட தொலைவையும் சிறிய நேரத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எட்ரன்ஸ் நியோ ஐந்து வினாடிகளில் 0 முதல் 40 கி.மீ வேகத்தில் பிக்-அப் வேகத்தை வழங்குகிறது. மேலும், பவர்ஃபுல் பேட்டரி திறனால் ஒற்றை சார்ஜிலே 120 கி.மீ வேகத்தில் செயல்திறன் வழங்குகிறது. இதன் விலையாக ரூ. 75 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளனர்.
இதுகுறித்து PureEv ஸ்டார்ட்அப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ரோகித் கூறுகையில்,
"இந்த நியோ வாகனத்தில் தனித்துவமான அம்சங்கள் இளைஞர்களை குறிவைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் ஒரு வருடத்தில் மட்டும் இந்த மாடலின் 10,000 யூனிட் விற்பனையை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். புதிய மாடல் முதலில் ஹைதராபாத்தில் கிடைக்கும்.
மேலும் 2020 டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும்" என்றார்
இந்த நிறுவனத்தின் முந்தைய எலக்ட்ரிக் வாகனங்கள் பட்டியல்:
EPluto 7G
Epluto
Etrance
Etrance+
Etron+
தற்போது, அறிமுகமாகவுள்ள Etrance Neo வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.