ஹைதராபாத்: கரோனா காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏறி வருகிறது. தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இச்சூழலில் ஒரு லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்வரை கடன் பெற நினைப்போருக்கு தங்க நகை அடமானக் கடன் சிறந்ததா அல்லது தனிநபர் கடன் சிறந்ததா என்ற கேள்வி எழலாம். அது குறித்த விவரங்களை விரிவாகக் காணலாம்.
தங்க நகைக்கடன் என்றால் என்ன?
தங்க நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டம். வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் உங்களது நகைகளை அடமானமாக வைத்து, அதற்கேற்ப உள்ள சந்தை மதிப்பை வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நகைகளை மீட்பதற்கான காலக்கெடு ஓராண்டாக இருக்கும் நிலையில், அதற்குள்ளாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
கரோனா கவச்: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் தங்க நகையை வங்கி அல்லது தனியா நிதி நிறுவனங்களுக்கு கடன் வாங்குவதற்காக எடுத்துச் சென்றால், அங்குள்ள நகை மதிப்பீட்டாளர், உங்களுடைய நகையின் தூய்மையை மதிப்பிடுவார்கள், மேலும் நீங்கள் கடன் வாங்கக்கூடிய கடன் தொகையை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி, நகையின் மொத்த மதிப்பில் 75 விழுக்காட்டை கடனாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, ரூ.1 லட்சம் சந்தை மதிப்புள்ள நகையின் மீது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை கடனாகப் பெற முடியும். இந்த கடனை வழங்குவதற்காக வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கும்.
தனிநபர் கடன் என்றால் என்ன?
தனிநபர் கடன் என்பது நிதி நிறுவனங்களைப் பொருத்தவரையில் அதிக பாதுகாப்பில்லாததாகவே கருதப்படுகிறது. எனவேதான் அதற்கு வட்டி விகிதம் அதிகம் என்பது, கடன் செலுத்தும் காலம் மிக குறுகியதாகவும் உள்ளது. வீட்டு கடனைப் போன்று 10 அல்லது 20 ஆண்டு காலம் வரை தனிநபர் கடனை இழுக்க முடியாது. வங்கிகள் பொதுவாக தனிநபர் கடனுக்கான திருப்பி செலுத்தும் காலத்தை குறைந்தபட்சம் 1 ஆண்டாகவும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலும் நிர்ணயித்துள்ளன.
வேலை இழந்துவிட்டீர்களா...? வேலையின்மைக் காப்பீடு உங்களுக்கு உதவும்!
தனிநபர் கடனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவது வட்டி விகிதம்தான். ஏனெனில், இதர வகை கடன் பிரிவுகளை காட்டிலும் தனிநபர் கடனுக்கு நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வட்டி வசூலிக்கின்றன. கடன் மதிப்பெண்களைப் (கிரெடிட் ஸ்கோர்) பொறுத்து வட்டி விகிதமானது 15 முதல் 18 விழுக்காடு வரை இருக்கும். இதனை உணர்ந்து, கடன் பெறுவோர் பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து கடன் பெறுவதே சாலச் சிறந்தது.
எது சிறந்தது?
தங்க நகைக் கடனை தனிநபர் கடனுடன் ஒப்பிட்டு பார்த்தால், தங்க நகைக்கடன் மலிவானது. ஒரு விழுக்காடு வட்டியுடன் தங்க நகை பெறும் சமயத்தில், இரண்டு முதல் மூன்று விழுக்காடு வட்டி தனிநபர் கடனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும், தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனி நபர் கடன் வாங்கும் போதுகிடைக்காது. தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும்.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருமானத்தைப்பொருத்து கால அளவில் கடனை பெறலாம். தங்க நகை அடைமான கடன் பெறும் போது தங்கத்தினை வங்கியில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். ஆனால் இன்றைய ஸ்மார்ட் உலகில் வீட்டில் உட்கார்ந்த படியே தனி நபர் கடனுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டிற்கு வரை வைத்து நாம் வங்கி கிளைக்குச் செல்லாமல் கடனைப் பெற முடியும்.
ஆனால், நகைக்கடனில் மறைமுகக் கட்டணங்கள் கிடையாது. வட்டியும் குறைவு என்பதை பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.