LIVE: திருச்சி பாரதிதாசன் பல்கலை. 38வது பட்டமளிப்பு விழா நேரலை! - திருச்சியில் பிரதமர்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 10:41 AM IST
|Updated : Jan 2, 2024, 11:34 AM IST
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி பல்கலைக்கழகம், பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று (ஜன.2) காலை 10.30 மணியளவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
பின்னர், திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12.00 மணியளவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்க உள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணிக்கு முதலமைச்சர் இல்லத்திலிருந்து புறப்பட்டு 7.50 மணிக்குச் சென்னை விமான நிலையம் சென்று 8.00 மணிக்குச் சிறப்புத் தனி விமானத்தில் பயணம் செய்து 8.50 மணிக்குத் திருச்சி விமான நிலையம் சென்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு 10.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு 10.30 மணிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்பு 11.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.00 மணிக்குத் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்து, அங்கு நிகழ்ச்சி முடிந்து பின்னர் 13.20 மணிக்குப் பிரதமரை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.