பூண்டு, வெங்காயம் மற்றும் லீக்ஸ் போன்ற காய்கறிகளில்புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சக்தி இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
பெருங்குடல் புற்றுநோயானது குடலின் கடைசி பகுதியில் (மலக் குடலில்) உருவாகிறது. ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி வெளியிட்ட ஆய்வில் , உணவில் அதிகமாக வெங்காயம், பூண்டு மற்றும் லீக்ஸ் போன்ற பூமிக்கு கீழ் விளையும் பொருட்களை அதிகம் சாப்பிடுவோருக்கு79 விழுக்காடு பெருங்குடல் புற்றுநோய் வருவதில்லை எனதெரிவித்துள்ளது.
வாழ்க்கை முறையில் நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு பொருட்கள் மூலம் பெருங்குடல் புற்றுநோய் உள்பட அனைத்து விதமான நோய்களையும் தடுக்கலாம்.
” உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகெங்கிலும் உள்ள பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக பெருங்குடல் புற்றுநோய் உள்ளது. 1.80 மில்லியன் மக்களில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.