ETV Bharat / lifestyle

உலக சுகாதார மையத்துடன் இணைந்து புதிய ஸ்டிக்கர்களை வெளியிட்ட வாட்ஸ் அப்! - வாட்ஸ் அப் ஸ்டிக்கர்

உலக சுகாதார மையத்துடன் இணைந்து, 'வீட்டிலேயே இணைந்திருப்போம்' (Together at home) என்ற தலைப்பில் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

together at home stickers
together at home stickers
author img

By

Published : Apr 23, 2020, 10:25 AM IST

ஊரடங்கினால் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கும் மக்களுக்காக சமூக வலைதள செயலிகள் புதிய வசதிகளையும், அம்சங்களையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றன. அந்த வகையில், வாட்ஸ் அப் செயலியில், ‘வீட்டிலேயே இணைந்திருப்போம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் நெருக்கடி காலத்தில் மக்களின் உணர்ச்சிகள் என்ன, எதிர்வினைகள் என்ன என்பதைச் சொல்லும் வண்ணம் புதிய ஸ்டிக்கர்களின் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை உலக சுகாதார மையத்துடன் இணைந்து வாட்ஸ் அப் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் இந்தி, அராபியம், ஜெர்மன், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கும்.

together at home stickers
புதிய வாட்ஸ் அப் ஸ்டிக்கர்

இந்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இது கோவிட்-19 நெருக்கடி காலத்திலும், அதற்குப் பிறகும்கூட மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து இணைந்திருக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ தவிர ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிற இந்திய முதலீடுகள் என்னன்ன?

மேலும், இவற்றை நகைச்சுவையாக, விழிப்புணர்வாக எப்படி வேண்டுமானாலும், மொழி, வயது வித்தியாசமின்றி பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்களில் கையைக் கழுவுதல், சமூக விலகல், உடற்பயிற்சி, மருத்துவர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்ட விஷயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

  • We worked together with @WHO on a new 'Together at Home' sticker pack to help people stay connected throughout this moment and beyond. Send an air high five, celebrate our medical heroes, or show love to a personal hero in your life. Available now in your WhatsApp. pic.twitter.com/6xjKylYzRd

    — WhatsApp Inc. (@WhatsApp) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.