ETV Bharat / lifestyle

பாடல்களை ரசிக்க பேஸ்புக்கின் அட்டகாசமான புதிய வசதி! - பேஸ்புக் புதிய வசதி

பாடல் வீடியோக்களை கேட்கும் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

Facebook
Facebook
author img

By

Published : Aug 3, 2020, 5:53 PM IST

உலகளவில் பிரபலமாகவுள்ள பேஸ்புக் நிறுவனம், அவ்வப்போது அதன் செயலியில் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்வதில் கில்லிதான். அந்த வகையில், புதிதாக பாடல் வீடியோக்களைக் கேட்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள பயனர்கள் டி-சீரிஸ் மியூசிக், ஜீ மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் இசை வீடியோக்களை பேஸ்புக் செயலியில் இருந்தே ரசிக்க முடியும். டிஸ்கவர் டேப்பில் இருக்கும் இந்த வசதியை அனைத்து பேஸ்புக் பயனாளர்களும் தற்போது பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேஸ்புக் இந்தியாவின் இயக்குநர் மனீஷ் சோப்ரா, "எங்கள் பயனாளர்களுக்கு மிகச் சிறந்த மியூசிக் வீடியோ அனுபவத்தை உருவாக்க நாங்கள் இந்திய இசைத் துறையில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும், அதிகாரப்பூர்வ இசை வீடியோக்களை எங்கள் தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும், தனித்துவமான புதிய வசதிகளையும் எங்கள் தளத்தில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து முயன்றுவருகிறோம். பேஸ்புக் மூலம் மக்கள் இணைக்கும் புதிய வழிகளில் கொண்டுவருவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவை கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 31) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சோனி மியூசிக், யுனிவர்சல் மியூசிக், வார்னர் மியூசிக், மெர்லின், பிஎம்ஜி, கோபால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இந்த புதிய வசதிக்காக பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்... வாயைப் பிளக்க வைக்கும் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.