ETV Bharat / lifestyle

இந்தியப் பயனர்களுக்கென பிரத்யேக அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் ப்ளான்! - prime video

அமேசான் நிறுவனத்தின் 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்துக்கான பிரத்யேக கைப்பேசி சந்தா சேவை, இந்திய பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக சலுகையாக மாதத்திற்கு ரூ.89 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Prime Video Mobile Edition, Prime Video Mobile Edition features, amazon prime membership cost, amazon prime video plans, prime video plans, Bharti Airtel, amazon prime video, அமேசான் ப்ரைம் வீடியோ, ப்ரைம் வீடியோ மொபைல் திட்டம், ப்ரைம் வீடியோ மொபைல் ப்ளான், ஏர்டெல் அமேசான் ப்ரைம், ஏர்டெல் ப்ரைம் வீடியோ, ஓடிடி சலுகைகள், top ott platforms  ott news, latest ott news, ott offers, amazon prime offers, airtel prime video, tamil tech news, technology news in india, technology news in tamil, science and technology news in india, current technology news in india, tamil technology news, தொழில்நுட்பச் செய்திகள், latest tech news in tamil, ப்ரைம் வீடியோ திட்டங்கள்
Prime Video Mobile Edition
author img

By

Published : Jan 15, 2021, 10:03 AM IST

டெல்லி: அதிகரித்து வரும் ஓடிடி பயனர்களைக் கருதி, அமேசான் ப்ரைம் வீடியோ, தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உடன் இணைந்து, கைப்பேசிகளுக்கான மாத சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்.டி தரத்தில் மட்டும் கண்டுகளிக்கக் கூடிய இந்த சேவைக்கு, அமேசான் நிறுவனம் சந்தா விலையை மாதம் ரூ.89ஆக நிர்ணயித்துள்ளது. முதல் 30 நாட்கள் இலவச அணுகலை வழங்கும் 'ப்ரைம் வீடியோ' அதன்பிறகு சந்தா கட்டணம் வசூலிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை முதலில் ஏர்டெல் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.299 திட்டத்தின் மூலம், ப்ரைம் வீடியோ மொபைல் திட்டம், தினசரி 1.5 ஜிபி அளவு இணையம், வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றையும் அனுபவித்துக் கொள்ளலாம். அதேபோல, பிரத்யேக ரூ.89 ப்ரைம் வீடியோ திட்டத்தின் மூலம் ஏர்டெல் பயனர்களுக்கு இலவசமாக 6 ஜிபி அளவிலான இணைய சேவை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  • Announcing the worldwide-first launch of Prime Video Mobile Edition in India!

    Mobile-only access to all Amazon Originals, movies and shows. Mobile Edition (ME) will be available starting today for @airtelindia prepaid customers! This is Prime Video built for ME. #PrimeVideoME pic.twitter.com/fKjv46IyZL

    — amazon prime video IN (@PrimeVideoIN) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அனைத்தும் அடங்கிய திட்டமாக, ரூ. 349 உள்ளது. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில், அனைத்து விதமான தகவல் சாதனங்களிலும் ப்ரைம் வீடியோவை அணுகும் வசதி, விளம்பரமற்ற ப்ரைம் மியூசிக் என மேலும் பல ப்ரைம் சேவைகளை இலவசமாக அனுபவித்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்திலும் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி இணையம் போன்றவற்றைப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.