ETV Bharat / lifestyle

உலக ஃபேஷன் தினம்: அன்றாட மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றும் ஃபேஷன் துறை! - அண்மை செய்திகள்

’ஆள் பாதி, ஆடை பாதி’ எனும் சொல்லாடல் குறிப்பிட்டு உணர்த்துவது ஒருவரது ஆடை பிறரைக் கவர்வதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதையே. அந்த ஆடைகளை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களையும், நிகழ்கால ட்ரெண்டைப் பிடித்து நம்மை அலங்கரித்துக் கொள்ள உதவும் ஃபேஷன் துறையையும் அங்கீகரித்து கொண்டாட வேண்டிய உலக ஃபேஷன் தினம் இன்று.

ஃபேஷன்
ஃபேஷன்
author img

By

Published : Aug 21, 2021, 12:33 PM IST

  • மாறி வரும் கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ப நிகழ்கால மக்களைக் கவர்ந்து லேட்டஸ்ட் தலைமுறையினரிடையே ஆதிக்கம் செலுத்தும் அனைத்தும் ஃபேஷன் எனும் சொல்லுக்குள் பொருந்தும்.
  • ஒரு சமூகத்தின் ஆடை, அணிகலன்கள், காலணிகள், சிகை அலங்காரங்கள் ஆகியவற்றின் மூலம் தற்போதைய ட்ரெண்டிங் ஃபேஷன் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
  • கதர் ஆடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வந்த காலம் தொட்டு உடைகள், அணிகலன்கள் என அன்றைய ஃபேஷன் சார்ந்த பொருள்கள் தோன்றி வந்தாலும், இந்தியாவில், உலகமயமாக்கலுக்குப் பின் தான் ஃபேஷன் துறை அடுத்த தளத்திற்கு பயணிக்கத் தொடங்கியது.
  • கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா ஃபேஷன் துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் ஃபேஷன் துறையில் கோலோச்சி வருகின்றன. அந்நாட்டின் ஆடை வடிவமைப்பாளர்கள் பெரும் கலைஞர்களாக கொண்டாடப்பட்டும் வருகின்றனர்.
    ஃபேஷன்
  • ஆன்லைன் வணிகம் கோலோச்சும் இன்றைய உலகில், இளைஞர்களின் ட்ரெண்ட் செட்டர்களாக வலம் வருபவை ஏஜியோ, மிந்த்ரா, கூவ்ஸ் ஆகிய தளங்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களுக்கேற்ற வகையில் தற்போதைய ட்ரெண்டில் ஆடை, அணிகலன்கள், காலணிகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் விற்று பெரும்பாலான மக்களின் முதல் சாய்ஸாக இந்நிறுவனங்கள் விளங்குகின்றன.
  • இந்தியாவின் ஃபேஷன் ஹப்பாக டெல்லி விளங்குகிறது. மனீஷ் மல்ஹோத்ரா, தருண் தஹிலியானி, மசாபா ஆகியோர் இந்தியாவின் பிரபல ஃபேஷன் கலைஞர்கள்.
    ஃபேஷன்
  • பிரிட்டிஷ் ஃபேஷன், கோட்டி ஆகிய விருதுகள் உலகின் ஃபேஷன் துறைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் சில. இந்தியாவில் வோக் நைக்கா , ஐஎஃப் ஏ உள்ளிட்ட சில விருதுகள் ஃபேஷன் துறையினருக்கு வழங்கப்படுகின்றன.
  • இந்த ஆண்டு ஃபேஷன் தினமான இன்று முதல், பீட்டா அமைப்பின் கோரிக்கையை ஏற்றும், சுற்றுச்சூழலையும், பிற உயிரினங்களை கருத்தில் கொண்டும், இந்தியாவின் 32 ஃபேஷன் வல்லுநர்கள் தாங்கள் விலங்குகளின் தோலை இனி ஆடை வடிவமைப்பில் பயன்படுத்தப்போவதில்லை என உறுதி ஏற்றுள்ளனர்.

இதையும் படிங்க: மக்களைக் காண பாதாளத்திலிருந்து பூலோகம் வரும் மகாபலி - ஓணம் வரலாறு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.