ETV Bharat / lifestyle

பயணங்களின்போது கண்டிப்பாக இதை கவனியுங்கள்!

கோடை விடுமுறை சுற்றுலா கொண்டாட்டத்துக்கு தயாராகிக்கொண்டு இருப்பவர்கள் பயணங்களின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

சுற்றுலா
author img

By

Published : Feb 1, 2019, 5:22 PM IST

கோடை விடுமுறை துவங்கும் நிலையில், சுற்றுலாத் திட்டங்கள் மனதில் அலைமோத தொடங்கியிருக்கும். இங்க போகலாம் அங்க போகலாம் என்று மாதக்கணக்கில் திட்டமிடும் நாம், பேக்கிங்கில் அடிப்படையான சிலவற்றை மறப்பதும் உண்டு.

அப்படி, பயணம் மேற்கொள்ளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளாக பயண நிபுணர்கள் கூறும் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

வழிகாட்டி:
உலகம் முழுவதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புதிதாக ஒருவர் செல்ல விரும்பும்பொழுது அவருக்கு கை கொடுக்கும் சாதனம் கூகுள் மேப்ஸ். செல்போன் இருந்தா போதுமே என்று நினைப்பவர்கள் எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். போகும் இடத்தின் மேப்பும் நிச்சயம் உதவும்.

உணவு:
நெடுந்தூர பயணத்தின்போது, சாலையோர கடைகளில் உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் சேர்த்த, வறுத்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நீர்ச்சத்து குறைபாடு உண்டாவதுடன் வாயு தொல்லையும் இருக்கும். அதற்கு பதில் தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற நீர்ச்சத்துள்ளவற்றை உண்பது நல்லது. உங்களுக்கு பிடித்தமான பானத்தை எடுத்துச் செல்வது நல்லது.

இடைவேளை:
பயணத்தின்போது, ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு சென்றால் நல்லது. பிடித்த படத்தையோ பாடலையோ கூட பார்க்கலாம். உடல் சோர்வை போக்க பிடித்தமான இடத்தில் நிறுத்தி இயற்கையை நேசித்துவிட்டு உற்சாகமாக பயணத்தை தொடருங்கள்.

முதலுதவி பெட்டி:
பயணங்களின்போது எப்பொழுதுமே முதலுதவி பெட்டி நம் கைவசம் எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. தலைவலி, அலர்ஜி, காயங்கள் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்போது உங்களுக்கு முதலுதவி பெட்டி உதவும். இதனால் உங்கள் பயணம் மகிழ்ச்சிகரமாக அமையும்.

undefined

கூலிங்கிளாஸ்:
சில சமயங்களில் நாம் பயணம் மேற்கொள்ளும்போது மாறுபட்ட தட்பவெட்ப சூழல் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். கண்களுக்கு சிரமம் கொடுக்காமலிருக்க கூலிங்கிளாஸ் எடுத்துச் செல்வது நல்லது.

வாகனம்:
உங்கள் வாகனத்தையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். டயர் பிரஷர், என்ஜின், பேட்டரி, ஏசி, ஏர் பியூரிஃபையர் போன்றவற்றை சரிபார்த்துக்கொள்வது தடையில்லா பயணத்திற்கு உதவும்.

Intro:Body:

http://www.eenaduindia.com/travel-time/discover-india/2018/10/06073614/The-ultimate-road-trip-packing-guide.vpf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.