ETV Bharat / lifestyle

ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்! - ஆடி பௌர்ணமி

ஆடி பௌர்ணமி நாளில் வழிபாடும் மகிமையும் குறித்து பார்க்கலாம்.

Aadi velli article
Aadi velli article
author img

By

Published : Jul 23, 2021, 8:59 AM IST

Updated : Jul 23, 2021, 9:57 AM IST

ஹைதராபாத் : தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதுபோல் ஆடி மாதத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் என்னென்ன நடத்தலாம் எதை நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்துள்ளனர்.

பொதுவாக தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாக கொண்டவை. சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக கருதுகிறோம்.

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதங்களில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாக இது விளங்குகிறது.

ஆடி மாத சிறப்புகள்

அதுமட்டுமின்றி இம்மாதத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் சில வழிபாடுகளை ஏற்படுத்தினர். அதுவே ஆடிப்பெருக்கு. இதன் நோக்கம் உடலும் மனமும் உழைக்க வேண்டும் என்பதே.

எனினும் இக்காலங்களில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர். சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. பல கிராமங்களில் கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழா நடத்துகின்றனர். மஞ்சள் தண்ணீர் கூல் போன்றவையும் ஊற்றப்படுகின்றன.

ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த ஆடி பெளர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள். பிள்ளையாரையும் வழிபடுவார்கள். திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த அற்புத நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிட்டும். உயர் பதவிகளை அடையலாம்.

ஆடி பௌர்ணமி விரதம்

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து வீட்டிலோ அல்லது கோயிலுக்கோ செல்ல வேண்டும். வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.

ஆடி பௌர்ணமி தினத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது நல்லது. பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்றும் வியாபார தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

குத்து விளக்கேற்றுதல்

இத்தினத்தில் பொதுவாக அம்மனுக்கு புடவை சாற்றி வழிபட்டால் நிறைய நற்பலன்களை அடையலாம் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆடி மாத செவ்வாய்கிழமைகளில் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுவது நல்லது.

இதையும் படிங்க : ஆடி மாத வழிபாடு - தேங்காய் சுடும் விழா

Last Updated : Jul 23, 2021, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.