மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் ஜெயக்குமாரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த பெண் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் எனக்கூறி நகைகளை பார்த்துள்ளார்.
இந்நிலையில், அந்த நகைக் கடையில் இல்லாத மாடல் நகை ஒன்றை அந்த பெண் கேட்டுள்ளார். உடனே கடை உரிமையாளர் ஜெயக்குமாரன், அந்த நகையை கொண்டுவர அருகில் உள்ள மற்றொரு கடைக்கு சென்றபோது, கடையில் இருந்த 7 சவரன் நெக்லஸை தனது பையில் வைத்துக்கொண்டு அந்த பெண் வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
அந்த காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மதுரை மாநகரின் கடுமையான குற்றங்களுக்கான விசாரணை காவல்துறை அலுவலகத்தின் அருகே நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.