கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முதலியார்குப்பம் சுற்று வட்டாரத்தில், அரசு மதுபான பாட்டில்களை சிலர் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக, மதுராந்தகம் கலால் காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கலால் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில், மோகன், எடிசன் உள்ளிட்ட கலால் காவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, முதலியார்குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள், நைனார்குப்பம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி ஆகிய இரு பெண்கள், டாஸ்மாக்கில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி அதனை அதிக விலை வைத்து விற்றது தெரியவந்தது.
அதன்பின்னர், கள்ளத்தனமாக மதுபானம் விற்ற இரு பெண்களையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்த 60 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கடத்தல்காரர்களின் மையம் ஆகிறதா சென்னை விமான நிலையம்....