ETV Bharat / jagte-raho

உதவி ஆய்வாளரின் கணவர் தற்கொலை: திருமணமான ஆறு மாதத்தில் சோகம்! - தற்கொலை

சென்னை: திருமணமான ஆறு மாதத்தில் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth
youth
author img

By

Published : Feb 24, 2020, 9:09 PM IST

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் அகத்தீஸ்வர் நகரைச் சேர்ந்தவர் ஆல்பின் டேன்னின் ஜோஸ் (30). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவருக்கும், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளரான மேரி சீனீவேஸ் (27) என்பவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன.

இன்று காலை வழக்கம்போல் மேரி சீனீவேஸ் பணிக்குச் சென்ற நிலையில், காலை வெகுநேரமாகியும் ஆல்பினின் அறை மூடியே இருந்திருக்கிறது. இதனால் பயந்துபோன அவரின் தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆல்பின் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பின்னர் நிகழ்விடத்திற்கு விரைந்துவந்த சங்கர் நகர் காவல் நிலைய காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆல்பின் குடும்பத் தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்னையா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கடைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.