ETV Bharat / jagte-raho

ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்!

சென்னை: எழும்பூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

பணம் பறிமுதல்
author img

By

Published : Apr 9, 2019, 10:39 PM IST

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள லட்சுமி லாட்ஜில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், நபர் ஒருவர் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த நபரை மடக்கிப்பிடித்த போலீசார், அவனை கைது செய்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

சென்னை எழும்பூரில் உள்ள லட்சுமி லாட்ஜில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தலைமை செயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சோதனை செய்தனர். அப்பொழுது 50 இலட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் வைத்து இருந்த  நபரை பிடித்து எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்னர். அவரிடம் எழும்பூர் போலிசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.