இந்தச் சம்பவம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகத்தில் நடந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென்று கடையின் உள்ளே நுழைந்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மருந்துக் கடை ஊழியரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் மாடல் டவுன் என்ற இடத்திலும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.