ETV Bharat / jagte-raho

காவல் உதவி ஆய்வாளருடன் சேர்ந்து சொத்தை அபகரித்த மனைவி - கணவர் புகார்!

சென்னை: காவல் உதவி ஆய்வாளருடன் கூட்டு சேர்ந்து சொத்துகளை அபகரித்துவிட்டதாக மனைவி மீது கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

complaint
complaint
author img

By

Published : Jan 7, 2020, 11:57 PM IST

சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு நர்மதா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஜனார்த்தனன், கடந்த 2019 மே மாதம் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில், தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், இதனைத் தட்டிக்கேட்டதால் காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ராயலா நகர் அருகேயுள்ள பூங்கா ஒன்றில் தனது மனைவியும், உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்டபோது, அவர்களைப் பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதனைப் பார்த்த உதவி ஆய்வாளர், தன்னை மிகக் கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், தன் குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் சொத்துகளை மனைவி நர்மதா, உதவி ஆய்வாளருடன் சேர்ந்து அபகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

’உதவி ஆய்வாளருடன் கூட்டு சேர்ந்து மனைவி 5 கோடி ரூபாய் சொத்துகள் அபகரிப்பு’

இதுகுறித்து ராயலா நகர், அசோக் நகர், தி.நகர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை காவல் ஆணையரை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருடன் மீட்பு!

Intro:Body:*காவல் உதவி ஆய்வாளருடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை அபகரிப்பதாக மனைவி மீது கணவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!*

சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு நர்மதா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாடு வாழ் இந்தியராக இருக்கும் ஜனார்த்தனன்,கடந்த 2019 மே மாதம் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்தநிலையில் தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை பலமுறை தட்டி கேட்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ராயலா நகர் அருகே உள்ள பூங்கா ஒன்றில் தனது மனைவியும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்ட போது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும் இதனை பார்த்த உதவி ஆய்வாளர் சாலையில் வைத்து மிகக் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார்.மேலும் தன் குழந்தைகள் மீது வாங்கிய 5 கோடி ரூபாய் சொத்துக்களை மனைவி உதவி ஆய்வாளருடன் சேர்ந்து அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காவல் உதவி ஆய்வாளர் மீது ஏற்கனவே அசோக் நகர், தி.நகர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் கொடுத்ததாகவும் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை காவல் ஆணையரை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

பேட்டி : ஜனார்த்தனன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.