திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஓகை கிராமத்தில் இரண்டு நாட்களாகவே சாலை ஓரமாக கார் நின்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் குடவாசல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் .
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனத்தை திறந்து பார்த்தபோது அதில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 1500க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதுபாட்டில்கள் இருந்துள்ளன.
உடனடியாக மது பாட்டில்களையும், காரையும் குடவாசல் காவல்துறையினர் பறிமுதல் செய்து வாகனப்பதிவு எண்ணை கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.