கொந்தி தோப்பு பகுதியில் உள்ள தங்க நிலா நகைக்கடையில் நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாகக் கடையின் உரிமையாளர் மாதவன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சி.3 காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், கடையின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளி பயன்படுத்திய வாகன எண்ணை வைத்து இன்று ராயபுரத்தில் பெண் ஒருவரை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்