ETV Bharat / jagte-raho

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.விற்கு மாற்றம்

சென்னை: பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்து உதவிய மூன்று பேர் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது.

arrest
arrest
author img

By

Published : Jan 22, 2020, 1:13 PM IST

அம்பத்தூரில் 2014ஆம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலைசெய்யப்பட்ட வழக்கு, தமிழ்நாட்டிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆள்சேர்த்த வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் தண்டனை பெற்று பிணையில் வந்த காஜா மைதீன், சையது அலி நிவாஸ், அப்துல் சமீம் ஆகிய மூன்று பேரும் கடந்த நவம்பர் மாதம் தலைமறைவானார்கள்.

அவர்களை தமிழ்நாடு உளவுத் துறையினர், கியூ பிரிவு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் முகமது அனிப் கான், இம்ரான்கான், அப்துல் செய்யது ஆகிய மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் காஜா மைதீன், கூட்டாளிகள் தப்பிச் செல்வதற்கு உதவிபுரிந்ததாகக் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் காஜா மைதீன், சையத் அலி நிவாஸ், அப்துல் சையது ஆகிய 3 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக டெல்லி காவல் துறையினருக்கு, தமிழ்நாடு கியூ பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரும் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் கைதுசெய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் கடந்த 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இருவர் சுட்டுக் கொலை செய்த பின் தலைமறைவாகினர். அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருந்தபோது பெங்களூரு காவலர்கள் அவர்களைக் கைதுசெய்தனர்.

கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன்

இந்நிலையில் இவர்களைக் கடந்த 16ஆம் தேதி கன்னியாகுமரி காவல் துறையினர் கைதுசெய்து தமிழ்நாடு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் மீது பயங்கரவாத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களும், கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திவந்தனர்.

அதனடிப்படையில், பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கையும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: எஸ்.ஐ. வில்சன் வழக்கு: குற்றவாளிகளை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Intro:Body:தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு சிம் கார்டு கொடுத்து வழக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,இதன் அடுத்த கட்டமாக உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்த வழக்கை என்.ஐ.ஏ க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் கடந்த 2014-ம் ஆண்டு சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் தமிழகத்திலிருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் தண்டனை பெற்று ஜாமீனில் விடுதலையான காஜாமைதீன் சையத் அலி நிவாஸ் அப்துல் சமீம் ஆகிய மூன்று பேர்களும் கடந்த நவம்பர் மாதம் தலைமறைவானார்கள்.இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய தமிழக உளவுத்துறையின் மற்றும் கியூ பிரான்ச் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த 8 ம் தேதி தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் பெங்களூரில் பதுங்கியிருந்த முகமது அனிப் கான், இம்ரான்கான், அப்துல் செய்யது ஆகிய மூன்று நபர்கள் கைது செய்தனர் .இவர்கள் தீவிரவாதி காஜா மொய்தீன் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் தமிழகத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்ததாக கைதுசெய்யப்பட்டனர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் தீவிரவாதி காஜா மொய்தீன், மற்றும் அவருடைய கூட்டாளிகள் சையத் அலி நிவாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு தமிழக கியூ பிரான்ச் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் 3 பேரும் கடந்த 9ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.இதே நேரத்தில் கடந்த 8ம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை என்ற இடத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை தீவிரவாதி அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இருவர் சுட்டுக் கொலை செய்தனர் இந்த வழக்கில் தலைமறைவான அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இருவரும் பெங்களூரில் பதுங்கி இருந்த போது பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் இவர்களை கடந்த 16ம் தேதி கன்னியாகுமரி போலீசார் வில்சன் கொலை வழக்குகில் கைது செய்து கன்னியாகுமரி கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் ( உ பா )கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகளிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் 10 பேரை தமிழக கியூ பிரிவு போலீஸ் கைது செய்திருந்தது. இந்நிலையீல் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.