சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது காவலர்களும், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வடிவேல் முன்பாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் 8 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிறையில் சுதந்திரமாக இருக்க விட மறுப்பதாக நீதிபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது!