ETV Bharat / jagte-raho

சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்; இருவர் கைது! - gun seized in erode

சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் சமூக விரோத கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், அனுமதியில்லாமல் துப்பாக்கியுடன் திரிந்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

author img

By

Published : Aug 5, 2020, 6:41 PM IST

ஈரோடு: அனுமதியில்லாமல் வேட்டைக்காக துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் சமூக விரோத கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொண்டப்பநாயக்கன்பாளையம் கருமலைக்கரடு பகுதியைச் சேர்ந்த சதீஸ், விவசாயி சுப்பிரமணியம் ஆகியோர் துப்பாக்கியுடன் திரிவதை கண்டு அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

தென்காசியில் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் கொடூரமாக வெட்டிக்கொலை!

காவல் துறையினர் அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மான், காட்டுப்பன்றி வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.