ஆந்திராவில் நகைக்கடை வைத்திருப்பவர் கமலேஷ். அவரிடம் வேலை பார்க்கும் தினேஷ் என்பவர், ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன், சவுகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று 4 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிச் செல்லும்போது 4 அடையாளம் தெரியாத நபர்கள், தங்களை டெல்லி காவல் துறையினர் எனக்கூறி தினேஷிடம் சோதனையிட்டுள்ளனர். பின்னர், தினேஷ் பையிலிருந்த தங்கக் கட்டிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யானை கவுனி காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த காவலர்கள், டெல்லி காவல் துறையினர் போல வேடமிட்டு வந்த 4 நபர்கள் தங்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஏற்கெனவே கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இக்கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையின் தனிப்படை விரைந்துள்ளது.
இதையும் படிங்க: நெல் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி இளைஞர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை